சுடச்சுட

  

  எட்டயபுரத்தில் அடிப்படை வசதியில்லாத பேருந்து நிலையம்: பயணிகள் அவதி

  By எட்டயபுரம்  |   Published on : 28th June 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  எட்டயபுரம் மகாகவி பாரதியார் நினைவு பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதியின்மை மற்றும் ஆக்கிரமிப்புகளால் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.

  இப் பேருந்து நிலையத்துக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு  ஆக்கிரமிப்புகளும், இடநெருக்கடியும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

  இந்தப் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, நவீன இருக்கைகள், நிழற்குடை, குடிநீர், நவீன இலவச கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். 

  இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் காளிக்கண்ணையா கூறியதாவது: எட்டையபுரம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்தாத சூழ்நிலை காணப்படுகிறது. மேலும் பேருந்து நிலைய வளாகத்துக்குள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதால், பெரும்பாலான பேருந்துகள் உள்ளே சென்று வரமுடியாமல் வெளிப்பகுதியிலேயே பயணிகளை ஏற்றியும், இறக்கியும் செல்கின்றன.

  பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீநாதஜோதி முத்துஸ்வாமி தீட்ஷிதர் நினைவாலயத்தை மையமாகக் கொண்டு, அதனைச் சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான பகுதிகளை பயன்படுத்தி பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, கூடுதல் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மேலும் எட்டயபுரம் புறவழிச்சாலை மார்க்கமாகச் செல்கின்ற அனைத்து அரசுப் பேருந்துகளும் இங்கு வந்து செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai