சுடச்சுட

    

    குளத்தூரில் வாகனச் சோதனை: புதுச்சேரி மதுபான பாட்டில்கள் பறிமுதல்

    By விளாத்திகுளம்  |   Published on : 28th June 2015 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகே குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகனச் சோதனையின் போது, ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட புதுச்சேரி மதுபான பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    குளத்தூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆதிலிங்கம் தலைமையிலான போலீஸார் கிழக்கு கடற்கரை சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை இரவில் வாகனத் தணிக்கை ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்ட போது ஒரு சாக்குப் பையில் 30 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து, போலீஸார் ஆட்டோ ஓட்டுநர் வேடப்பட்டி ஜெயராஜ் மகன் ஜெயசந்திரனை (40) கைது செய்து, மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai