கோவில்பட்டியில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி
By கோவில்பட்டி | Published on : 28th June 2015 01:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவில்பட்டியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
வ.உ.சி. பள்ளி வளாகத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு, கோட்ட கலால் அலுவலர் அம்புரோஸ் நேவிஸ்மேரி தலைமை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் சீனிவாசன், மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் தங்கராஜ், உதவி ஆய்வாளர் ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணியை கோட்டாட்சியர் கண்ணபிரான் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பேரணியில், பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பேரணி, எட்டயபுரம் சாலை, அரசு அலுவலக வளாகம் வழியாக கோட்ட கலால் அலுவலர் அலுவலகம் முன் நிறைவடைந்தது.
இதில், பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தர்மராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் மதிவாணன், மதுவிலக்கு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பால்ராஜ், கோட்ட கலால் துறை உதவியாளர் ருக்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பேரணியில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியபடி சென்றனர்.