சுடச்சுட

    

    கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் பட்டமளிப்பு

    By கோவில்பட்டி  |   Published on : 28th June 2015 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதிப் பாடப்பிரிவுகளின் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு கல்லூரிச் செயலர் கே.செல்வராஜ் தலைமை வகித்தார். இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். முதல்வர் மாரியப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக பதிவாளர் சே.கணேஷ்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், மாணவர்களை நல்ல சான்றோர்களாக உருவாக்குவதோடு மட்டுமின்றி, நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதர்களாகவும் உருவாக்க வேண்டும் என்றார் அவர். தொடர்ந்து, கோ.வெங்கடசுவாமி நாயுடு அரசு உதவி பெறும் கல்லூரியின் விலங்கியல் துறை தலைவர் ஆதிலட்சுமி உறுதிமொழியை வாசிக்க, பட்டம் பெற்றவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.   விழாவில், 268 மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கல்லூரி ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், மாணவர், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai