Enable Javscript for better performance
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆனி வருஷாபிஷேகம்

    By திருச்செந்தூர்  |   Published on : 28th June 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆனி வருஷாபிஷேகம் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    வருஷாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப் பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று, தொடர்ந்து கும்ப பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மேள,தாளங்கள் முழங்க கோயில் விமான தளத்துக்கு கும்பங்கள் எடுத்துச் செல்லப்பட்டு,அங்கு காலை 8.25 மணிக்கு முதலில் மூலவர்,சண்முகர்,வெங்கடாசலபதி விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வள்ளி, தெய்வானை அம்மன் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வல்லப விநாயகர்,செம்பு,தங்க கொடிமரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் மூலவர் சுப்பிரமணியர், சண்முகர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இரவில் குமரவிடங்கப் பெருமான், வள்ளியம்மன் தனித்தனி தங்க மயில் வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    வருஷாபிஷேக விழாவில் கோயில் இணை ஆணையர் (பொ) ஆர்.பொன்சுவாமிநாதன், உள்துறை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன், மேலாளர் அய்யாப்பிள்ளை,காவல் துணை கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) ராஜாமணி, கோயில் காவல் நிலைய ஆய்வாளர் பி.பட்டாணி, உதவி ஆய்வாளர் ராணி திருவிழா பணியாளர் கோ.வெங்கடேசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai