சுடச்சுட

  

  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எம்.எல்.ஏ. நிதிஉதவி

  By திருச்செந்தூர்  |   Published on : 28th June 2015 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரத்தில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை வழங்கினார்.

  அடைக்கலாபுரம் தெற்குத்தெருவைச் சேர்ந்த அந்தோணிகுரூஸ், ஜெயபாலி, பால்ராஜ், ஆரோக்கியராஜ், மிக்கேல்ராஜ் ஆகியோரின் குடிசை வீடுகள் கடந்த சில தினங்களுக்கு முன் தீ விபத்தில் எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில் திருச்செந்தூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சம்பவ இடத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவி தொகையாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கினார். நிகழ்ச்சியின்போது, ஆறுமுகநேரி பேரூராட்சித்தலைவர் அ.கல்யாணசுந்தரம், செயல் அலுவலர் உஷா, அடைக்கலாபுரம் பங்குத்தந்தை ச.தே.ஜஸ்டின், வழக்குரைஞர் கிருபா, பேரூராட்சி உறுப்பினர்கள் இந்திரா ஜெனிபர், ஜெயராஜ், வரண்டியவேல் ஊராட்சித்தலைவர் ஜனகர், அடைக்கலாபுரம் ஊர் தலைவர் டி.அருள்ராஜ், செயலர் வி.தர்மராஜ், பொருளாளர் ஸ்டீபன், உறுப்பினர்கள் சபரி ஆனந்தம், கென்னடி, ஜேசுராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai