சுடச்சுட

  

  தூத்துக்குடியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி

  By தூத்துக்குடி  |   Published on : 28th June 2015 02:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இருசக்கர வாகனம் ஓட்டுவோர் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியில் சனிக்கிழமை இரண்டு இடங்களில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

  ஊர்க்காவல் படை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணியில் 200-க்கும் மேற்பட்ட ஊர்க்காவல் படை வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். நகரில் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

  வட்டார போக்குவரத்து அலுவலகம்:இதேபோல, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடைபெற்ற தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தொடங்கி வைத்தார். இதில்,  மோட்டார் வாகனங்கள் விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணி புறவழிச்சாலை, 3 ஆவது மைல், மில்லர்புரம், பழைய பேருந்து நிலையம் வழியாக பழைய துறைமுகத்தை சென்றடைந்தது. பின்னர், அங்கிருந்து தெற்கு கடற்கரை சாலை வழியாக சென்று தென்பாகம் காவல் நிலையம் முன்பு நிறைவடைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai