சுடச்சுட

    

    நாசரேத் அருகே  மாயமான பள்ளி மாணவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

    திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சிதம்பராபுரம் கல்லடி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் சேர்மத்துரை (12). இவர் நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறியில் உள்ள அவரது அத்தை செல்வி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தாராம்.  இந்நிலையில் வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற மாணவர் தாமதமாக வீட்டுக்கு வந்தாராம். அதை அவரது அத்தை கண்டித்தாராம். இதையடுத்து, புத்தக பையை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்றாராம். அதன்பின் அவன் வீடு திரும்பவில்லையாம். பல இடங்களில் தேடியும் எங்கு போனார் என்ற விவரம் தெரியவில்லையாம்.

    இதுகுறித்து செல்வி நாசரேத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai