Enable Javscript for better performance
லாரி ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    நாசரேத்தில் லாரி ஓட்டுநரைத் தாக்கியதாக இருவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

    நாசரேத் சாமுவேல் தெருவைச் சேர்ந்த சார்லஸ் கோயில்பிள்ளை மகன் ஆரோன் இம்மானுவேல் (28). லாரி  ஓட்டுநரான இவர், தனது நண்பர்கள் முதலைமொழியைச் சேர்ந்த பீ. அருள் ராஜேந்திரன் (25), ப. ரமேஷ் (30) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை  இரவு அங்குள்ள மதுக்கடையில் மது அருந்த சென்றனராம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீர் பாட்டிலை உடைத்து ஆரோனை ரமேஷ் குத்தினராம். இதில் பலத்த காயம் அடைந்த ஆரோன், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாசரேத்  சிறப்பு உதவி ஆய்வாளர் தங்கேஸ்வரன் வழக்குப் பதிந்து அருள் ராஜேந்திரன், ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai