சுடச்சுட

  

  விளாத்திகுளம் அருகே பூசனூரில் சுமை வாகன ஓட்டுநர் விஷம் அருந்தி  தற்கொலை செய்து கொண்டார்.

   விளாத்திகுளம் வட்டம் பூசனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் பழனிச்சாமி (33), வாகன ஓட்டுநர். இவரது மனைவி கற்பகவள்ளி (30). திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. மதுப்பழக்கம் உடையவரான பழனிச்சாமி, கடந்த ஓர் ஆண்டிற்கு முன்பாக கடனுக்கு புதிய சுமை வாகனம் வாங்கி ஓட்டி வந்தாராம். தொழிலில் போதிய வருமானமின்றி நஷ்டம் ஏற்பட்டதாம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது மனைவி கற்பகவள்ளி பிரசவத்திற்காக சாயல்குடியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றிருந்தாராம். வீட்டில் தனியாக இருந்த பழனிச்சாமி வெள்ளிக்கிழமை இரவு மதுவில் விஷம் கலந்து அருந்தி மயங்கி கிடந்தாராம். இதையடுத்து அப்பகுதியில் உள்ளவர்கள் அவரை மீட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பழனிச்சாமி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனராம். இதுகுறித்து குளத்தூர் போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai