Enable Javscript for better performance
விஜயராமபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    சாத்தான்குளம் அருகேயுள்ள விஜயராமபுரம் தேவி ஸ்ரீமுத்தாரம்மன் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி கோயிலில் காலை சிறப்பு யாகசாலை பூஜைகள், கும்பம் புறப்பாடு நடைபெற்றன. பின்னர் ஸ்ரீமுத்தாரம்மன், கணபதி, பெருமாள் ஆகிய தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து ஸ்ரீபெருமாள், ஸ்ரீகணபதி, தேவி ஸ்ரீமுத்தாரம்மன், மாரியம்மன், சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றன. அதன் பின்னர் அலங்கார பூஜை நடைபெற்றது. மாலையில் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும், இரவு அன்னதானமும்  நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வரதராஜன் செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai