சுடச்சுட

  

  அரசு மருத்துவக் கல்லூரியில் 15 மாணவர்கள் சேர்க்கையை உறுதி செய்தனர்

  By தூத்துக்குடி,  |   Published on : 29th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 15 மாணவ, மாணவியர் தங்களது சேர்க்கையை உறுதி செய்தனர்.

  மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவியருக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை மாலையில் தேர்வு செய்யப்பட்டதற்கான சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது. சேர்க்கை கடிதம் கொண்டு வரும் மாணவ, மாணவியருக்கு உடனே சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.

  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியைப் பொருத்தவரை மொத்தமுள்ள 150 இடங்களில் 23 இடங்கள் அகில இந்திய பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, 123 இடத்துக்கான மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், சனிக்கிழமை யாரும் சேர்க்கையை உறுதி செய்யவில்லை.

  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை 15 மாணவ, மாணவியர் தங்களது சேர்க்கையை உறுதி செய்தனர். இதற்காக, மருத்துவமனை முதல்வர் சாந்தகுமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

  சேர்க்கை கடிதத்தை கொண்டு வரும் மாணவ, மாணவியருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சேர்க்கை உறுதி செய்யப்பட்டது. ஜூலை 2 ஆம் தேதி வரை வாய்ப்பு உள்ள போதிலும், திங்கள்கிழமை இரவுக்குள் அனைத்து இடங்களுக்கும் சேர்க்கை உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai