சுடச்சுட

    

    ஆட்டோ ஓட்டுநரை மிரட்டிய வேன் ஓட்டுநர் கைது

    By சாத்தான்குளம்,  |   Published on : 29th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாசரேத்தில் ஆட்டோவை சேதப்படுத்தி, அதன் ஓட்டுநரை மிரட்டிய வேன் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர்.

    நாசரேத் 2ஆவது கைலாசபுரம் தெருவைச் சேர்ந்தவர் ஜெ. மாணிக்கராஜ் (50). ஆட்டோ ஓட்டுநரான இவர், சனிக்கிழமை ஆட்டோவை வெளியே நிறுத்தி விட்டு, வீட்டுக்குள் இருந்தாராம்.

    அப்போது நாசரேத் கொர்நேலியஸ் தெருவைச் சேர்ந்த வேன் ஓட்டுநர்கள் வி. ஜெயசிங் ஜான் பென்னடிக், சவுந்தர் காம்பவுண்ட் தெருவைச் சேர்ந்த ஜெ. ராஜேஷ் ஆகிய இருவரும் மாணிக்கராஜிடம் கடனாக பணம் தருமாறு கேட்டனராம். அதற்கு அவர் மறுத்தாராம்.

    இதில், ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இருவரும் மாணிக்கராஜ் ஆட்டோவைச் சேதப்படுத்தியதுடன், அவரைக் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, மாணிக்கராஜ் நாசரேத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜெயசிங் ஜான் பென்னடிக்கை கைது செய்தனர். ராஜேûஸ தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai