சுடச்சுட

  

  மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கண்ணொளி காப்போம் திட்ட பயிற்சி முகாம் மெஞ்ஞானபுரத்தில் நடைபெற்றது.

  முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலர் பார்வதி துர்கா தலைமை வகித்தார். தூத்துக்குடி மருத்துவத் துறை உதவி இயக்குநர் செய்யது அபுதாகிர் முன்னிலை வகித்தார்.

  தேசிய குழந்தைகள் நலத் திட்டம் குறித்தும், பள்ளி மாணவர்களிடம் ரத்த சோகை நோய் கண்டறிதல், சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் ஜேனிஸ், கண்ணன் ஆகியோர் பேசினர். கண்ணொளி காப்போம் திட்டம் குறித்தும், அரசின் இலவச கண்ணாடி வழங்குதல் குறித்தும் கண் மருத்துவ உதவியாளர் முருகன் விளக்கினார். செவிலியர் லில்லி பாக்யவதி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் மா. பரமசிவன் செய்திருந் தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai