சுடச்சுட

    

    சொக்கன்குடியிருப்பில் திமுக நிர்வாகிகள் கூட்டம்

    By சாத்தான்குளம்  |   Published on : 29th June 2015 12:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொம்மடிக்கோட்டை ஊராட்சி திமுக நிர்வாகிகள் கூட்டம் சொக்கன்குடியிருப்பில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு கிளைத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மேரி ஜெயசித்ரா வரவேற்றார். இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.கே.ஏ.பி.காசியானந்தம், ஒன்றியச் செயலர் ஆ.செ.ஜோசப், நகரச் செயலர் மகாஇளங்கோ ஆகியோர் பேசினர்.

    இதில், சொக்கன்குடியிருப்பு கிராம மக்களுக்கு கூடுதலாக குடிநீர் விநியோகிக்க அதிகாரிகளை வலியுறுத்துவது, கொம்மடிக்கோட்டை ஊராட்சியில் அனைத்து தெருக்களிலும் முறையாக தெருவிளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில், ஒன்றியப் பொருளாளர் வேல்துரை, மாவட்டப் பிரதிநிதி லெ. சரவணன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், ஒன்றியப் பிரதிநிதிகள் பிரம்பலிங்கம், சிலுவை தணிஸ்லாஸ், அந்தோணிமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஊராட்சி திமுக செயலர் ஜாண்சன் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai