Enable Javscript for better performance
தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசளிப்பு

    By கோவில்பட்டி,  |   Published on : 29th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டியவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மற்றும் கோவில்பட்டி ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை இணைந்து தலைக்கவசம் அணிய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுபவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன் தலைக்கவசம் அணிந்து இருசக்கரவாகனம் ஓட்டியவர்களுக்கு ஏ.எஸ்.பி. முரளிரம்பா பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து தலைக்கவசம் அணிய வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

    நிகழ்ச்சியில், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா, பொறுப்பாளர் சேர்மராஜன், மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதன், போக்குவரத்து காவல் துறை உதவி ஆய்வாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai