Enable Javscript for better performance
தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி

    By கோவில்பட்டி  |   Published on : 29th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     கோவில்பட்டியில் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    கோவில்பட்டி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் நடைபெற்ற இப்பேரணியை, கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து கோட்டாட்சியர் கண்ணபிரான் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் பாத்திமா பர்வீன் முன்னிலை வகித்தார்.

    பேரணியில், ஓட்டுநர் பயிற்சி பள்ளி மற்றும் இருசக்கர வாகன விற்பனையாளர்கள், இருசக்கர வாகனத்தினர் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றனர். கோட்டாட்சியர் அலுவலகம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai