சுடச்சுட

    

    திருமண கோஷ்டி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து: மணப்பெண் உள்பட 7 பேர் காயம்

    By எட்டயபுரம்,  |   Published on : 29th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    எட்டயபுரம் அருகே ஞாயிற்றுக்கிழமை திருமண கோஷ்டியினர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மணப்பெண் உள்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

    சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த அசோகன் மகன் வினோத் (32). இவர் இதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார். இந்நிலையில், வினோத் திருச்செந்தூரில் உள்ள அவரது உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு உறவினர்களுடன் வேனில் புறப்பட்டுச் சென்றாராம். வேனை அதே பகுதியைச் சேர்ந்த கேசவராஜன் மகன் ஜெயக்குமார் (32) ஓட்டியுள்ளார். வேன், ஞாயிற்றுக்கிழமை காலையில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை நான்கு வழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது.

    விபத்து குறித்து தகவலறிந்த எட்டயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, விபத்தில் காயமடைந்த வேன் ஓட்டுநர், மணப்பெண் விஜயலட்சுமி உள்பட வினோத்தின் உறவினர்கள் சாரதா (46), சிவகுமார் (48), தேவகி (80), கமலேஷ் (9) ஆகிய 7 பேரையும் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai