Enable Javscript for better performance
தெற்கு ஆத்தூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா- Dinamani

சுடச்சுட

    

    தெற்கு ஆத்தூர் வியாபாரிகள் சங்கம் சார்பில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா

    By ஆறுமுகனேரி,  |   Published on : 29th June 2015 12:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தெற்கு ஆத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில், 8 இடங்களில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா, இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டது.

    தெற்கு ஆத்தூர் பஜாரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் 8 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன், தொடக்க விழாவுக்கு தெற்கு ஆத்தூர் பஜார் வியாபாரிகள் சங்கத் தலைவர் செ. அரசகுமார் தலைமை வகித்தார். ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சோமசுந்தரம், தொழிலதிபர் மா. மணி, வெற்றிலை விவசாயிகள் சங்கத் தலைவர் சதீஷ்குமார் மற்றும் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலர் ஜெயசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்காணிப்பு கேமராக்களை வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் த. வெள்ளையன் இயக்கி வைத்தார். இண்டர்நெட் இணைப்பை தூத்துக்குடி மதுவிலக்கு துணை கண்காணிப்பாளர் ராஜாமணி தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆத்தூர் காவல் உதவி ஆய்வாளர் டி. அருள்சாம்ராஜ், நாடார் சங்கத் தலைவர் தாமோதரன், ஆத்தூர் பஜார் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஏ.பி. தமிழரசன், முக்காணி வியாபாரிகள் சங்கத் தலைவர் அருணாச்சலம், தெற்கு ஆத்தூர் செயலர் செந்தில்வேல் மற்றும் துணைச் செயலர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    வியாபாரிகள் சங்க பொருளாளர் செ. மதன் வரவேற்றார். துணைத் தலைவர் ரா. சுரேஷ் நன்றி கூறினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai