Enable Javscript for better performance
தைலாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    தைலாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி

    By சாத்தான்குளம்,  |   Published on : 29th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தைலாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு ஒரு கழிவறை கட்ட வலியுறுத்தி சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

    தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம், தூத்துக்குடி மறைமாவட்ட கோல்பிங் குடும்பம் ஆகியவை இணைந்து வீட்டுக்கு ஒரு கழிப்பறையை கட்டுவோம், சுகாதாரத்தை பேணுவோம் என்பதை வலியுறுத்தி சாத்தான்குளம் அருகே உள்ள தைலாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணியை நடத்தினர்.

    பேரணியை பிடானேரி ஊராட்சித் தலைவர் சரோஜாதேவி தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கிவைத்தார். தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குநர் மரியவளன், தைலாபுரம் பங்குத்தந்தை அமலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணி தைலாபுரத்தில் தொடங்கி, முக்கிய வீதி வழியாக வந்து ஆறுமுகனேரியில் முடிவடைந்தது. ஏற்பாடுகளை கோல்பிங் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலுவை அந்தோணி செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai