Enable Javscript for better performance
பெண்ணிடம்9 பவுன் நகைபறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    உடன்குடி அருகே தண்டுபத்தில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணிடமிருந்து 9 பவுன் தாலிச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

    தண்டுபத்தைச் சேர்ந்த ராமதுரை மனைவி ஜெயகலா (39). இவர் வீடு உடன்குடி செல்லும் பிரதான சாலையில் உள்ளது. ஜெயகலா ஞாயிற்றுக்கிழமை மாலையில் வீட்டுக்கு வெளியே நின்ற தங்களது ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வந்த இரு மர்மநபர்கள் திடீரென ஜெயகலாவின் கழுத்தில் இருந்த 9 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு

    தப்பினராம்.

    இதுகுறித்த புகாரின்பேரில் மெஞ்ஞானபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து நகைகளைப் பறித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai