Enable Javscript for better performance
மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போதை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    கோவில்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட மூப்பன்பட்டி காலனியில் ஞாயிற்றுக்கிழமை கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, தமமுக நிறுவனர் தலைவர் ஜான்பாண்டியன், மது ஒழிப்பு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

    இந்நிகழ்ச்சியில், மாநிலப் பொருளாளர் அய்யாத்துரைப்பாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலர் ரவிகுமார், இளைஞரணிச் செயலர் பாலமுருகன், சண்முகராஜ், நெல்லை மாவட்டச் செயலர் கண்மணி மாவீரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    தொடர்ந்து, கூசாலிபட்டி, பாண்டவர்மங்கலம், ஜான்பாண்டியன் நகர், மந்தித்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று, கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்துப் பேசினார்.

    முன்னதாக வில்லிசேரி, இடைசெவல் கிராமத்திலும், சனிக்கிழமை கயத்தாறு ஒன்றியத்துக்குள்பட்ட பல்வேறு இடங்களிலம் கட்சிக் கொடியை ஏற்றி வைத்துப் பேசினார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai