சுடச்சுட

    

    கோவில்பட்டி அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    கோவில்பட்டி முத்துநகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த சவரிமுத்து மகன் சூசைமிக்கேல் (83). சிறிது காலமாக நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த அவர், விரக்தியடைந்து விஷத்தை குடித்தாராம்.

    அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்துவிட்டதாகக் கூறினார்.

    இதுகுறித்து கிழக்கு காவல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai