Enable Javscript for better performance
மொபெட்டை எரித்து தொழிலாளியை கொல்ல முயன்றதாக இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மொபெட்டை எரித்து தொழிலாளியை கொல்ல முயன்றதாக இளைஞர் கைது

    By சாத்தான்குளம்,  |   Published on : 29th June 2015 12:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் மொபெட்டை எரித்து அவரைக் கொலை செய்ய முயன்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்துள்ளனர்.

    பழனியப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் த. ராஜதுரை (32). இவருக்கும், மீரான்குளத்தைச் சேர்ந்த த. ராஜ்குமார் (24) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளதாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு ராஜதுரை, அவரது மொபெட்டில் பேய்க்குளம் பஜாருக்கு வந்தாராம். அப்போது அங்கு நின்ற ராஜ்குமார், அவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு, அவரது மொபெட்டை பெட்ரோல் ஊற்றி எரித்து, கத்தியால் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது.

    அவரிடமிருந்து தப்பிய ராஜதுரை, சாத்தான்குளம் போலீஸில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ராஜ்குமாரை சனிக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai