சுடச்சுட

  

  விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் மாணவர், மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

  By தூத்துக்குடி,  |   Published on : 29th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகம் முழுவதும் விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர் ஜோதி சற்குணம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இளைஞர் நலத் துறையின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவர், மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கேற்ப நல்ல பயிற்சி மற்றும் தங்கும் இட வசதி, உணவுடன் கூடிய 28 விளையாட்டு விடுதிகள் மாவட்டத் தலைநகரங்களில் செயல்பட்டு வருகின்றன.

  விளையாட்டு விடுதிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாநில அளவில் தேர்வு நடைபெற உள்ளது. விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் கொண்டுள்ள மாணவர், மாணவிகள் அதற்கான உரிய படிவங்களை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து படிவத்திற்கான கட்டணம் ரூ.10- ஐ நேரிடையாக தேர்வு நடத்தும் அலுவலரிடம் செலுத்த வேண்டும்.

  மதுரை மாவட்ட விளையாட்டரங்கில் ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு மாணவர்களுக்கான தடகளம், கைப்பந்து (ஹேன்ட் பால்), ஹாக்கி, இறகுபந்து மற்றும் நீச்சல் ஆகிய விளையாட்டுகளுக்கு 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பிலும் கூடைப்பந்து விளையாட்டுக்கு பிளஸ் 1 வகுப்பிலும் சேரலாம்.

  மாணவிகள் தடகளம், இறகுபந்து, கைப்பந்து (ஹேன்ட் பால்), ஹாக்கி மற்றும் கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கும் விண்ணப்பிக்கலாம்.

  ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டரங்கில் கிரிக்கெட் (மாணவர்கள் மட்டும்) விளையாட்டுக்கு 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பில் சேருவதற்கான தேர்வு ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

  தஞ்சாவூர் கணபதிநகரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் பளுதூக்குதல் (மாணவிகள் மட்டும்) விளையாட்டுக்கு 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்பில் சேருவதற்கு ஜூலை 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு தேர்வு நடைபெறுகிறது.

  சென்னை நேரு விளையாட்டரங்கில் வாள்சண்டை (மாணவர், மாணவிகள்) விளையாட்டுக்கு 7, 8, 9 மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்குகளில் சேருவதற்கான தேர்வு ஜூலை 3 ஆம்தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது.

  இந்த தேர்வின்போது மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விளையாட்டு விடுதி சார்பான விவரங்களை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிடையாக தேர்வு நடைபெறும் இடத்தில் காலை 8 மணிக்கு தேர்வு நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்து தேர்வு போட்டியில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0461 2321149 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai