சுடச்சுட

  

  ஹோலிகிராஸ் கல்லூரியில் ஆலய அடிக்கல் நாட்டு விழா

  By ஸ்ரீவைகுண்டம்,  |   Published on : 29th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   மீனாட்சிபட்டி ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரியில் ஆலய அடிக்கல் நாட்டு விழா மற்றும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் 4ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதை கொண்டாடும் விழாவென இருபெரும் விழா நடைபெற்றது.

  கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவை செபத்தையாபுரம் சேகரகுரு ஜான் வெஸ்லி தொடங்கிவைத்தார். மறவன்மட சேகரகுரு லிவிங்ஸ்டன் தேவசெய்தி வழங்கினார்.

  இந்திய மெஷினரி சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் டேனியல் ராஜாமணி வாழ்த்திப் பேசி, ஆலய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டினார். கல்லூரி நிறுவனர் பிரகாஷ் ராஜ்குமார் தலைமை வகித்தார். கல்லூரித் தாளாளர் ராஐரத்தினம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் டோரா அருள்செல்வி வரவேற்றார்.

  அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தேர்வில் ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரி 90.84 சதவீத மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்று, தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் 4ஆவது இடத்தை பெற்றுள்ளதை விழாவில் பங்கேற்றவர்கள் பாராட்டி பேசினர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai