சுடச்சுட

  

  33 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த பாலிடெக்னிக் மாணவர்கள்

  By தூத்துக்குடி,  |   Published on : 29th June 2015 12:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 33 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமை சந்தித்துக் கொண்ட மாணவர்கள், தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

  தூத்துக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கடந்த 1979 ஆண்டு முதல் 1982 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பழைய மாணவர்கள், தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அனைவரும் கலையரங்கில் அமர்ந்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆசிரியர்களுக்கு பொன்னடை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை சமுத்திரராஜ், நாகலிங்கம் ஆகியோர் இணைந்து செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai