Enable Javscript for better performance
ஆலந்தலை ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி- Dinamani

சுடச்சுட

    

    ஆலந்தலை ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி

    By திருச்செந்தூர்  |   Published on : 30th June 2015 12:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் ஆலந்தலை தூய பேதுரு, தூய பவுல் ஆலயத்தில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தூய பேதுரு, தூய பவுல் ஆலய திருவிழா கடந்த 19ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது. நவநாள்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றன. 9ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை கல்லாமொழி மீனவர் சங்க இயக்குநர் மரியஜான் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில், தூத்துக்குடி இளையோர் பணி இயக்குநர் பிரதீபன் மறையுரையாற்றினார்.  10ஆம் திருவிழாவான திங்கள்கிழமை காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி அமலி நகர் பங்குத்தந்தை அன்றனி ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் தலைமையில் நற்கருணை பவனியைத் தொடர்ந்து, தூத்துக்குடி இனிகோ நகர் பங்குத்தந்தை பெஞ்சமின் டி சூசா மறையுரையாற்றினார்.

    விழாவில், ஆலய ஆன்மிகத் தந்தை அலெக்சாண்டர், கொம்புத்துறை பங்குத்தந்தை விக்டர்லோபோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஏற்பாடுகளை பங்குத்தந்தை வில்சன், ஊர் கமிட்டியினர், ரொசாரி மாதா பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai