எள்ளுவிளை ஸ்ரீ வாடாப்பூ அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
By திருச்செந்தூர் | Published on : 30th June 2015 12:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருச்செந்தூர் அருகேயுள்ள எள்ளுவிளை ஸ்ரீ வாடாப்பூ அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி காலையில் யாக சாலை பூஜை, அக்னி கார்யம், தசதானம், யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து காலை 10 மணிக்கு பூஜை செய்யப்பட்ட கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, விமான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ வாடாப்பூ அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், நண்பகல் அன்னதானமும் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை(ஜூன் 30)முதல் 45 நாள்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 14ஆம் தேதி கோயில் கொடை விழா நடைபெறுகிறது.