சுடச்சுட

  

  "கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை பிரிவு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்'

  By தூத்துக்குடி  |   Published on : 30th June 2015 12:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடி மாவட்டத்தில் மேல்நிலைக் கல்வி பயிலும் சிறுபான்மை பிரிவு மாணவர், மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

  தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பிளஸ் 1, பிளஸ் 2,  ஐ.டி.ஐ, ஐடிசி, பாலிடெக்னிக் பட்டயப்படிப்புகள், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், எம்பில் ஆராய்ச்சிப் படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2015-16 ஆம் ஆண்டுக்கு www.scholarships.gov.in  புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு புதிய இனங்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரையிலும், புதுப்பித்தல் இனங்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

   விண்ணப்பிக்க விரும்பும் மாணவர், மாணவிகள் கடந்த ஆண்டு பொது தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம் அனைத்து வகையிலும் ரூ. 2  லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

  www.scholarships.gov.in  என்ற புதிய இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இணைப்புகளை பதிவேற்றம் (upload)) செய்து மாணவர், மாணவிகள் பதிவு செய்யப்பட்ட அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்றிதழ், மதத்திற்கான சான்று, வருவாய்துறையிடமிருந்து பெற்ற வருமான சான்றிதழ் ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்திய ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக் கணக்கு எண் (Core Bank Service Account Number, IFS Code)) ஆகிய விவரங்களுக்கான ஆவணங்களை இணைத்து அவர்கள் பயிலும் கல்வி நிலையங்களில் தாக்கல் செய்ய வேண்டும்.

  கல்வி உதவித் தொகை மாணவர், மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரிடையாக செலுத்தப்பட உள்ளதால் சரியான வங்கிக் கணக்கு எண் மற்றும் வங்கி குறியீடு எண் போன்ற விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். வங்கி விவரங்களை தவறாக அளிக்கும் பட்சத்தில் மாணவ, மாணவியரின் கல்வி உதவித்தொகை நிராகரிக்கப்படும்.

  ஆன்லைன் மூலம் மாணவர், மாணவிகளால் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் (புதியது) அக்டோபர்  31-க்குள் (புதுப்பித்தல்) ஆன்லைன் மூலம் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai