Enable Javscript for better performance
காவல் துறை மூலம் இளைஞர்களுக்கு பாதுகாப்பு சேவை பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    காவல் துறை மூலம் இளைஞர்களுக்கு பாதுகாப்பு சேவை பயிற்சி

    By தூத்துக்குடி  |   Published on : 30th June 2015 12:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு காவல் துறை மூலம் பாதுகாப்பு சேவை குறித்த திறன் எய்தும் பயிற்சி திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் வகையிலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாகவும் மாவட்ட காவல் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியன சார்பில் பாதுகாப்பு சேவை திறன் எய்தும் பயிற்சி நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தொடங்கிய இப்பயிற்சியில், மாவட்டம் முழுவதுமிருந்து 25-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்துகொண்டனர்.

    பயிற்சி முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தொடங்கிவைத்து பயிற்சி கையேட்டை வழங்கினார். அவர் பேசுகையில், ஆயுதம் இல்லாத பயிற்சி, முதலுதவி பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 20 நாள்கள் இப்பயிற்சி நடைபெறும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பாதுகாப்பு பணியில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாகேந்திரன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai