சுடச்சுட

  

  தூத்துக்குடியில் தென்னிந்திய திருச்சபை கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில பேராயர் ஜெபசந்திரனை பணியமர்த்தக் கோரியும், தென்னிந்திய திருச்சபை சினாட் மாடரேட்டர் தேவாசீர்வாதத்தைக் கண்டித்தும், அகில இந்திய கிறிஸ்தவ உரிமைகள் இயக்கம் சார்பில், தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, மதுரை இறையியல் கல்லூரி முன்னாள் முதல்வர் தியான்சந்த் கார் தலைமை வகித்தார். பெடரல் சர்ச் ஆப் இந்தியா தலைவர் மரியராஜ், கிங் ஆப் கிங்ஸ் சர்ச்சஸ் இந்தியா தலைவர் எட்வர்டு ராஜன், தலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலர் டேனியல் ஞானசேகரன், தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞர் அணிச் செயலர் மோகன்தாஸ் சாமுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ இயக்கங்களின் நிர்வாகிகள் மாமல்லன், அன்புச்செல்வம், ஜான்சன் டேவிட், வழக்குரைஞர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai