Enable Javscript for better performance
கோவில்பட்டி, கயத்தாறில் இன்று நடைபெறவிருந்த சாலைமறியல், உண்ணாவிரதம் வாபஸ்- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி, கயத்தாறில் இன்று நடைபெறவிருந்த சாலைமறியல், உண்ணாவிரதம் வாபஸ்

    By கோவில்பட்டி  |   Published on : 30th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக இருந்த சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

    கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் வேகத்தடை அமைக்கக் கோரி செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக இளைஞர் பெருமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து வட்டாட்சியர் ஜோதி தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், வேகத்தடை அமையவுள்ள இடத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஜூலை 9ஆம் தேதிக்குள் வேகத்தடை அமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நடைபெறவிருந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    உண்ணாவிரதம் வாபஸ்:  அய்யனார்ஊத்து அரசு உயர்நிலைப் பள்ளியில் கட்டட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் அக்கிராமத்தில் சாலை வசதி, வாருகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, அனைத்து சாதி சமய நல்லிணக்க பண்பாட்டுக் கழகம் மற்றும் 5ஆவது தூண் நிறுவனர் சங்கரலிங்கம் தலைமையில், கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை(ஜூன் 30) உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

    வட்டாட்சியர் தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் நிதியுதவி மூலமும், நபார்டு திட்டத்தின் நிதியுதவியும் கோரப்பட்டு நடவடிக்கையில் உள்ளதாக கல்வித் துறையினர் தெரிவித்தனர்.

    அக்கிராமத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் பராமரிப்பு பணிகள் 10 நாள்களுக்குள் மேற்கொள்ளப்படும் என உள்ளாட்சித் துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) நடைபெறவிருந்த உண்ணாவிரதம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai