சுடச்சுட

  

  கோவில்பட்டி காளியம்மன் கோயிலில் திங்கள்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.

  இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 6.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், சகல தேவதா காயத்ரி மூலமந்திர ஹோமம் மற்றும் மூலஸ்தான அபிஷேகம் நடைபெற்றது. 9 மணிக்கு மேல் கும்பங்கள் எழுந்தருளல், விமான கோபுரங்கள் அபிஷேகம் மற்றும் மூலஸ்தான கும்பா பிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் மண்டகப்படிதாரர் நாடார் மொத்த வியாபாரிகள் சார்பில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சிம்ம வாகனத்தில் வெள்ளிக் குடையின் கீழ் அம்மன் திருவீதியுலா நடைபெற்றது.

  விழாவில் நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ராஜசேகரன், துணைத் தலைவர் கண்ணப்பன், செயலர் ராஜேந்திரபிரசாத், பொருளாளர் செல்வராஜ், பத்திரகாளியம்மன் கோயில் தர்மகர்த்தா சின்னமாடசாமி, செயலர் மாணிக்கம் மற்றும் கோயில் குழுவினர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai