சுடச்சுட

  

  சாத்தான்குளம் அருகே ஓடையை மறித்து சுவர் கட்ட முயற்சி: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

  By சாத்தான்குளம்  |   Published on : 30th June 2015 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சாத்தான்குளம் அருகே ஓடையை மறித்து தனி நபர் ஒருவர் திங்கள்கிழமை சுவர் கட்ட முயன்றதை வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் தடுத்து நிறுத்தனர்.

  சிதம்பராபுரத்தில் ஓடை புறம்போக்கு இடம் பொதுப் பாதையாக உள்ளது. இதை அக் கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது நிலம் என கூறி முள்வேலி போட்டு அப் பாதையை அடைத்து வைத்தார். இதனால் தண்ணீர் எடுப்பது மற்றும் சுடுகாட்டுக்கு சடலத்தை எடுத்துச் செல்வது பாதிக்கப்பட்டது.

  இது தொடர்பாக கிராம மக்களுக்கும், தனிநபருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறதாம். இதனால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்து வந்தனர். மேலும் இப் பிரச்னையில்  மோதல் ஏற்பட்டு காவல் நிலையத்தில் வழக்கும் உள்ளது.

  இந்நிலையில் தனிநபர் அந்த ஓடை புறம்போக்கு பொதுப் பாதையை மறித்து திங்கள்கிழமை மதில் சுவர் கட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையறிந்ததும் கிராம மக்கள் அங்கு திரண்டனர். சாத்தான்குளம் வட்டாட்சியர் வாலசுப்பிரமணியன், ஆய்வாளர் விஜயகுமாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வட்டாட்சியர்  வாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வாளர் சின்னத்துரை, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், நில அளவையர் சிவக்குமார், ஆய்வாளர் விஜயகுமார், புதுக்குளம் ஊராட்சித் தலைவர் பாலமேனன் ஆகியோர் அந்த இடத்திற்குச் சென்று பார்வையிட்டு சுவர் கட்டுவதைத் தடுத்து நிறுத்தினர்.

  மேலும் (ஜூலை 2) வியாழக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தி முடிவு செய்வது என வட்டாட்சியர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai