சுடச்சுட

  

  கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை விஸ்வகர்மா உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயபால் தலைமை வகித்தார். தொழிலதிபர் எம்.எஸ்.எஸ்.வி.பாபு முன்னிலை வகித்தார். கவிஞர் கவிமேகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, தமிழரசி வெண்ணிக்குயத்தியார் என்ற தலைப்பில் பேசினார்.  மன்ற துணைத் தலைவர் திருமலைமுத்துசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுசாமி, முன்னாள் பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.

  கூட்டத்தில், கம்பன் கழகத்தைச் சேர்ந்த செம்மை நதிராஜா, ஓய்வு பெற்ற பள்ளித் தலைமையாசிரியர்கள் தர்மராஜ், சிந்தாமதார்பக்கீர், நல்லாசிரியர் வை.பூ.சோமசுந்தரம், கழுகுமலை திருவள்ளுவர் மன்றத்தைச் சேர்ந்த முருகன், சுங்க வரித் துறை உதவி ஆணையர் வரதராஜன், தொழிலதிபர் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  நாடார் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வடிவேல் வரவேற்றார். திருவள்ளுவர் மன்றத் தலைவர் கருத்தப்பாண்டி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai