சுடச்சுட

  

  தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஊழியர் சாவு

  By தூத்துக்குடி  |   Published on : 30th June 2015 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தூத்துக்குடியில் மின்கம்பம் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் அனல் மின் நிலைய ஊழியர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

  தூத்துக்குடி முத்தையாபுரம் அய்யன்கோயில்தெருவைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் தெய்வமாறன் (37). இவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். தூத்துக்குடி துறைமுக சாலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட தெய்வமாறன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தென்பாகம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai