சுடச்சுட

    

    தூத்துக்குடியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை: ஆட்சியர்

    By தூத்துக்குடி  |   Published on : 30th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடியில் 1 ஆம் ரயில்வே கேட் மற்றும் இரண்டாம் ரயில்வே கேட் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ம. ரவிகுமார் தெரிவித்தார்.

    தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி: ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வாருவது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் வருவாய் பிரிவு, உணவு பாதுகாப்பு பிரிவு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம், பேரூராட்சி நிர்வாகம், வளர்ச்சிப் பிரிவு ஆகிய 5 துறைகள் தொடர்பான புகார்களை 9486454714 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலம் தெரிவிக்கலாம்.

    தூத்துக்குடி 1 ஆவது ரயில்வே கேட் சுரங்க பாதை, 2 ஆவது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1 ஆவது ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் முடிந்துவிட்டன. அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ளோருக்கு ஓரிரு நாள்களுக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 41 தீயணைப்பு கருவிகளும் காலாவதியாகிவிட்டதால் புதிய கருவிகள் வாங்குவதற்கு அரசிடம் நிதி கேட்கப்பட்டுள்ளது என்றார்.

    இதைத்தொடர்ந்து, பணியின்போது இறந்த பணியாளர்கள் இருவரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான நியமன ஆணையையும், வெளிநாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு உதவித்தொகையையும் ஆட்சியர் வழங்கினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai