சுடச்சுட

    

    தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவமனை தினக்கூலி பணியாளர்கள் நூதனப் போராட்டம்

    By தூத்துக்குடி  |   Published on : 30th June 2015 12:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவமனை தினக்கூலி பணியாளர்கள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1999ஆம் ஆண்டு 33 பேர் தினக்கூலி அடிப்டையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களை 12 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்நீதிமன்ற மதுரை கிளை பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டது.

     இருப்பினும், கடந்த 10 மாதங்களாக தங்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த மருத்துவமனை தினக் கூலி பணியாளர்கள் கடந்த வாரம் திங்கள்கிழமை மண் உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     பணியாளர் சோலையப்பன் தலைமையில் ஏறத்தாழ 22 பேர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரை நிர்வாணத்துடன் நின்று முழக்கங்களை எழுப்பினர். பின்னர், அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் சிறிது நேரம் முழக்கங்களை எழுப்பிவிட்டு ஆட்சியரிடம் மனு அளித்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai