Enable Javscript for better performance
வேம்பார், கீழவைப்பார் கடற்கரையில் ரூ.26 கோடியில் தூண்டில் வளைவு பாலம்- Dinamani

சுடச்சுட

    

    வேம்பார், கீழவைப்பார் கடற்கரையில் ரூ.26 கோடியில் தூண்டில் வளைவு பாலம்

    By விளாத்திகுளம்  |   Published on : 30th June 2015 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விளாத்திகுளம் அருகேயுள்ள வேம்பார், கீழவைப்பார் மீனவ கிராமங்களில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை வேம்பார் கடற்கரையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

    வேம்பார், கீழவைப்பார் கடல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தின் காரணமாக படகுகள் சேதமடைவதைத் தவிர்க்கவும், கடற்கரைப் பகுதியை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். மீனவ மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, வேம்பாரில் ரூ.14 கோடியே 20 லட்சத்திலும், கீழ வைப்பாரில் ரூ.11 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டிலும் தூண்டில் வளைவு பாலம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து வேம்பாரில் 870 மீட்டர் தொலைவுக்கும், கீழ வைப்பாரில் 750 மீட்டர் தொலைவுக்கும் பெரிய கற்களை கொண்டு தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை நடைபெற்றது. இதில்  ஜீ.வி. மார்க்கண்டேயன் எம்எல்ஏ தூண்டில் வளைவு பால கட்டுமான பணிகளை தொடங்கிவைத்தார்.

    இந் நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலர் ரூபம் வேலவன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செண்பகராமன், வையணன், மாவட்ட குழு உறுப்பினர் கவுரி துரைபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் கடற்கரைவேல், விளாத்திகுளம் கூட்டுறவு வங்கி தலைவர் சுந்தர், ஜெயலலிதா பேரவை செயலர்கள் வசந்தம் ஜெயக்குமார், சுதாகர், வேம்பார் மீனவர் சங்கத் தலைவர் அந்தோனிராஜ், மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் மரியசெல்வம், நீர் வடிநில திட்ட உதவிச் செயற்பொறியாளர்கள் மலர்விழி, பாரதி கண்ணன், நடராஜன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai