சுடச்சுட

    

    "4 ஆவது பைப்லைன் மூலம் செப்டம்பரில் குடிநீர் வழங்கப்படும்'

    By தூத்துக்குடி  |   Published on : 30th June 2015 12:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு 4 ஆவது பைப்லைன் மூலம் முதல் கட்டமாக செப்டம்பர் மாதத்தில் குடிநீர் விநியோகிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சோ. மதுமதி தெரிவித்தார்.

    தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ரூ.282.44 மதிப்பில் 4 ஆவது பைப் லைன் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கான விளக்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மேயர் ஏபிஆர் அந்தோணி கிரேஸ் தலைமை வகித்தார். ஆணையர் சோ. மதுமதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் ஆணையர் சோ. மதுமதி பேசியது: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட 4 ஆவது பைப் லைன் திட்டப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது தொகுப்பு பணிகள் 85  சதவீதம் முடிவடைந்துள்ளன. 3 ஆவது மற்றும் 4 ஆவது தொகுப்பு பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளன.

    சில இடங்களில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படவில்லை என உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மீதமுள்ள பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்படும் என்றார்.

    கூட்டத்தில், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜகோபாலன், 4 ஆவது பைப் லைன் திட்ட நிர்வாகி விஜயசந்திரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai