தூத்துக்குடி
நாகலாபுரத்தில் ரத்த தான முகாம்
நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த தான கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நாகலாபுரம் அரசு கலைக்கல்லூரியில் ரத்த தான முகாம் மற்றும் ரத்த தான கழகம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் பெரியார் தலைமை வகித்தார். கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் கருப்பசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி மருத்துவர் சாந்தி முகாமையும், ரத்த தான கழகத்தையும் தொடங்கி வைத்துப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட செஞ்சிலுவை சங்க பொருளாளர் வன்னிராஜா, உறுப்பினர்கள் பேராசிரியர்கள் புகழேந்தி, செல்வி அகிலா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.