Enable Javscript for better performance
\\\"அசோக சக்ரா விருது பெற விண்ணப்பிக்கலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    வீர தீரச் செயல்கள் புரிந்தமைக்காக அசோக சக்ரா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் லூ. தீர்த்தோஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டில் வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் அசோக சக்ரா விருதுகளுக்கான விண்ணப்பங்கள் இந்திய அரசால் வரவேற்கப்படுகின்றன. விருதுகள் அசோக சக்ரா விருது (தன்னிகரற்ற தியாகம் புரிந்தவர்கள்), கீர்த்தி சக்ரா விருது (பகட்டான வீரத்துடன் போராடியவர்கள்), ஷவுர்ய சக்ரா விருது (வீரத்துடன் போராடியவர்கள்) என்ற 3 பிரிவுகளில் வழங்கப்படும்.

    ஆண்டுதோறும் குடியரசு, சுதந்திர தின நிகழ்வின்போது மத்திய அரசு இந்த விருதுகளை வழங்குகிறது. ராணுவத்தினர், பொதுமக்கள், காவல் துறையினர், மத்திய ஆயுதப் படை வீரர்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

    பல்வேறு நிகழ்வுகளான இயற்கைப் பேரழிவுகள், விபத்து, நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்றுதல், தீவிபத்துகள், தீவிரவாதத் தாக்குதல், திருட்டு, வழிப்பறி சம்பவங்களைத் தடுத்தவர்கள் ஆகியோருக்கு வீரதீரச் செயல்கள் புரிந்தமைக்காக அசோக சக்ரா விருதுகளை பல்வேறு பிரிவுகளில் இந்திய அரசு வழங்கி வருகிறது.

    அதன்படி 2015-2016ஆம் ஆண்டுக்கான அசோக சக்ரா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுபெற விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தள முகவரியான w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n​ மூலம் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.

    2015-16ஆம் ஆண்டுக்கான அசோக சக்ரா விருதுக்கான விண்ணப்பம் எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை "உறுப்பினர் - செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 116-ஏ, ஈவெரா பெரியார் நெடுஞ்சாலை நேரு பூங்கா, சென்னை - 600 084' என்ற முகவரிக்கு இம்மாதம் 18-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர் 74017 03452 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai