Enable Javscript for better performance
கோவில்பட்டியில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டியில் அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

    By கோவில்பட்டி  |   Published on : 15th April 2016 09:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டியில் வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

     கோவில்பட்டியிலிருந்து புறப்பட்ட அரசு நகரப் பேருந்து, சாத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

    கோவில்பட்டி பிரதான சாலையில் காமராஜர் சிலை அருகே சென்றபோது பேருந்தின் பின்பகுதியில் திடீரென சப்தம் கேட்டது. இதில், பேருந்தின் பின்பக்கக் கண்ணாடி கல்வீச்சில் உடைந்தது தெரியவந்தது.

    ஓட்டுநரான சின்னஓடைப்பட்டியைச் சேர்ந்த ஜெ. பாக்கியராஜ் (29) பேருந்தை கிழக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

    இதுகுறித்து நடத்துநரான விருதுநகர் மாவட்டம், ஆர்.ஆர்.நகரையடுத்த விஜயராம்பேரியைச் சேர்ந்த மா. பொன்கருப்பசாமி (47) அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து மீது கல் வீசிய மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai