Enable Javscript for better performance
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி- Dinamani

சுடச்சுட

    

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி

    By கோவில்பட்டி  |   Published on : 15th April 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் திருவிழாவையொட்டி தீர்த்தவாரி வியாழக்கிழமை நடைபெற்றது.

    இக்கோயில் பங்குனித் திருவிழா ஏப்ரல் 5இல் தொடங்கியது. நாள்தோறும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜை, திருவீதியுலா நடைபெற்றது.

    10ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை நள்ளிரவு திறக்கப்பட்டது. தொடர்ந்து, திருவனந்தல் பூஜை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி, அம்பாளை தரிசித்தனர். பின்னர் உற்சவர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அம்பாளுக்கு மஞ்சள் குத்தி தீர்த்த திருக்குளத்துக்கு செல்லுதல் ஆகியவை நடைபெற்றன.

    தொடர்ந்து, திருக்குளத்தில் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. மாலையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் வீதியுலா, இரவில் ரிஷப வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதியுலா வருதல் நடைபெற்றது.

    ஏற்பாடுகளை ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    தெப்பத் திருவிழா: 11ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் சுவாமி, அம்பாள் திருக்குளத்தில் பவனி வருதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai