Enable Javscript for better performance
தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

    By ஆறுமுகனேரி  |   Published on : 15th April 2016 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்ப் புத்தாண்டையொட்டி, ஆறுமுகனேரி, காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களிலும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    ஆறுமுகனேரி திருவாவடுதுறை ஆதீனத்துக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை நடைபெற்றது. பின்னர் காலசந்தி, மாதப் பிறப்பு பூஜை, கும்ப பூஜை, 108 ஷீராபிஷேகம், ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு 16 வகையான திரவிய அபிஷேகம், 216 இளநீர் அபிஷேகம், மகாஅபிஷேகம் நடைபெற்றது. பின்னர், அன்னதானம் நடைபெற்றது. பூஜையை ஐயப்ப பட்டர் நடத்தினர். மாலையில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    பூஜையில் கோயில் மணியம் சுப்பையா, பக்தஜன சபைச் செயலர் கந்தையா, நகர்நல மன்றத் தலைவர் பூபால்ராஜன், சிவகுமார், அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

    விநாயகர் கோயில் தெருவில் உள்ள அருள்மிகு சந்தனமாரி அம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயிலில் சித்திரை விஷுவை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. பூஜையில் சைவ வேளாளர் சங்கத் தலைவர் ஜெ. சங்கரலிங்கம், துணைத் தலைவர் மாணிக்கவாசகம், பொருளாளர் சே. கற்பகவிநாயகம், செயலர் முத்துராமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ஏஐடியூசி காலனியில் உள்ள வெள்ளி விநாயகர் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி  ருத்ர, சமக, கும்ப பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை, அன்னாபிஷேகம், மாலையில் சந்தனக்காப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, பஞ்சாங்கம் வாசித்தல் நடைபெற்றது.

    ஆத்தூர்   அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயில் உள்ள ஆத்தூர் வட்டாரத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    காயல்பட்டினம் ஸ்ரீகணபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai