Enable Javscript for better performance
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    தூத்துக்குடி ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவன் மீட்பு

    By தூத்துக்குடி  |   Published on : 13th June 2016 12:49 AM  |   அ+அ அ-   |    |  

    தூத்துக்குடியில் தந்தையின் கொடுமை தாங்காமல் ஞாயிற்றுக்கிழமை வீட்டை விட்டு தப்பியோடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவனை ரயில்வே போலீஸார் மீட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

    தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜோசப் - மேரி தம்பதியின் மகன் சாமுவேல் (16). இவர், மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். பத்தாம் வகுப்பு தேர்வில் 391 மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும் கணிதத்தில் மட்டும் 12 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், மாணவருக்கு பேய் பிடித்து விட்டதாகக் கூறி, காலில் சங்கிலியால் கட்டி கடந்த இரண்டு மாதங்களாக அவரது தந்தை ஜோசப் வீட்டுக்குள் அடைத்து வைத்திருந்தாராம். இந்நிலையில் மாணவர் சங்கிலியை அறுத்துக் கொண்டு வீட்டிலிருந்து தப்பி ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

    இந்நிலையில், ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவரை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக இலவச குழந்தைகள் சேவை மையத்துக்கும் புகார் அளித்தனர்.

    இதையடுத்து ரயில் நிலையம் சென்ற குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்களிடம், ரயில்வே போலீஸார் மாணவரை ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் மாணவனை குழந்தைகள் நலக்குழுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக, மாணவர் சாமுவேலின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai