சுடச்சுட

  

  பாஞ்சாலங்குறிச்சி கருப்பசாமி கோயில் விழா: கோவில்பட்டியில் சமாதானக் கூட்டம்

  By கோவில்பட்டி  |   Published on : 11th May 2016 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கோட்டை அருகே அமைந்துள்ள கருப்பசாமி கோயில் விழா நடத்துவது தொடர்பான சமாதானக் கூட்டம், கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  பாஞ்சாலங்குறிச்சியில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கடைசி வெள்ளி, சனிக்கிழமைகளில் வீரபாண்டிய கட்டபொம்மன் விழா அரசு சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம். அதே நாளில் கட்டபொம்மனின் குலதெய்வமான வீரசக்கதேவி ஆலய விழாவும், அந்த ஆலயத்துக்கு எதிரே அமைந்துள்ள வீரன் சுந்தரலிங்கத்தின் குலதெய்வமான கோட்டை கருப்பசாமி ஆலய விழாவும் நடைபெறும்.

  இந்த ஆண்டு கோயில் திருவிழாவை நடத்த காவல் துறை எதிர்ப்பு தெரிவித்தது.

  இதையடுத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கண்ணபிரான் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

  உயர்நீதிமன்ற மதுரை கிளையின் அறிவுறுத்தலின்படி மே 20ஆம் தேதிக்குப் பிறகு ஓட்டப்பிடாரம் காவல் துறையினரின் அனுமதி பெற்று முறையாக விழா நடத்திக் கொள்ள வேண்டும் என்றும், சித்திரை கடைசி வெள்ளிக்கிழமை கருப்பசாமி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து கொள்ளவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் பந்தல் போடுவதற்கோ, மின்விளக்குகள் அமைப்பதற்கோ அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

  ஆனால் போராட்டக் குழுவினர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கூட்டத்தில் சுமுக முடிவு எதுவும் ஏற்படவில்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai