Enable Javscript for better performance
திருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேகம்

    By திருச்செந்தூர்  |   Published on : 21st May 2016 12:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்செந்தூர் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த அருள்தரும் ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை  அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது.

    காலை 5.15 மணிக்கு விஸ்வரூபமும், மங்கள இசையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு தேவாரப் பாடல் பாடப்பட்டது. காலை 7 மணிக்கு விநாயகர் பூஜை, 8 மணிக்கு கணபதி ஹோமம், ருத்ரஹோமத்தை தொடர்ந்து காலை 9.20 மணிக்கு   சுவாமி, அம்பாள் கும்ப கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    பின்னர் காலை 10 மணிக்கு மூலவருக்கும், அம்பாளுக்கும் பலவகையான அபிஷேகம் நடைபெற்று, அலங்காரமாகி நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும், நடராஜருக்கும் சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, அலங்காரச் சப்பரத்தில் நடராஜர் 8 வீதிகளிலும் உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai