Enable Javscript for better performance
அறிவியல் கண்காட்சி: முக்காணி அரசுப் பள்ளிக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    அறிவியல் கண்காட்சி: முக்காணி அரசுப் பள்ளிக்கு விருது

    By DIN  |   Published on : 28th November 2016 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முக்காணி குறு வள மைய அளவிலான அறிவியல் கண்காட்சியில் முக்காணி அரசு மேல்நிலைப் பள்ளி விருது பெற்றது.
    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் தேசிய வளர்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதத்தின் பங்கு என்ற தலைப்பில் முக்காணி குறு வள மையத்தைச் சார்ந்த பள்ளிகளுக்கான அறிவியல் கண்காட்சி முக்காணி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
    இக்கண்காட்சியில் 15 பள்ளிகள் கலந்துகொண்டதில், ஒட்டுமொத்த சிறந்த பள்ளிக்கான விருது முக்காணி அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. புல்லாவழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு முதல் பரிசும், முக்காணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இரண்டாம் பரிசும் மற்றும் முக்காணி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளிக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
    விருதுபெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைமை ஆசிரியை இ.பிரேமா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai